Welcome

Saturday, November 13, 2010

நினைவு...

சில வார்த்தைகள் மௌனத்தின் ஒலியாய் கேட்கின்றன ..
சில மௌனங்கள் வார்த்தைகளின் மௌனமாய் அமைகின்றன ..
பேசாத பேச்சுக்கள் கேட்டவண்ணமுள்ளன..
நிரம்பியும் வெற்றிடமாய் இருக்கின்றன ...
நினைவுகள்..!

ஒரு நொடி கடந்த காலம் ...

புகைப்படம் ஒன்று பார்க்க நேரிட்டது ..
அதனால் ஏனோ பல நியாபகங்கள் கிளறபடுகின்றன...
அந்த புகைபடத்தில் இருந்த முகங்கள் பெயர்களற்று
தம்மை காட்டிகொள்கின்றன..
சில முகங்களில் சிரிப்பும்..
சில முகங்களில் சந்தேகமும்..
சில முகங்களில் சோகமும் ..
கலந்து இருக்கின்றன ...
ஒரு புகைப்படம் எல்லா உணர்சிகளையும்
காண்பிக்க கூடியதாகவும் ..
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு உணர்ச்சியை தருவதாகவும் அமைகிறது..
என்னவாயினும் அவை காலத்தை
ஒரு நொடி அடக்கி வைத்துவிடுகின்றன ....

வரலாறு ...

பெரிதாய் எதுவும் ஆசை படாமல்
சிறிதாய் ஆசைப்பட்டு ...
அதுவும் நிறைவேறாமல் இறந்தவனை
புதைத்த இடத்தின் பக்கத்தில் கிடந்தது
புத்தனின் மண்டை ஓடு ....

Tuesday, September 7, 2010

வெளி..!

நாம் கதவின் சாவி துருவத்தின் வழியே
உலகத்தை பார்துகொண்டிருகின்றோம்..

நாம் முழுதாய் பார்க்க அவ்வளவு வசதியும் இல்லை...
அனால் அப்படி பார்க்கும் பொழுது மட்டுமே
ஒருவிதமான எதிர்பார்ப்பு இருக்கின்றது...

மறுபக்கத்தில் நமக்கு பிடித்ததும் பிடிக்காததும்
நமக்கு தெரிந்தாலும்
ஏதோ ஒன்றை எதிர்பார்த்தே
மறைந்தும் குனிந்தும் பார்த்துகொண்டிருக்கின்றோம் ..

யாரோ சாவியை நுழைத்து கதவை திறந்து விட...
முன்னும் பின்னும் யாரும் அற்ற வெளியில்
நாம் மிதந்து கொண்டிருப்போம்...

Tuesday, August 31, 2010

ஆண்- பெண் - பொம்மை ...

பெண்கள்-
ஏதோ ஒரு பொம்மையை கட்டி அனைத்து தூங்குகின்றனர் ...
அனால் அவர்கள் அந்த பொம்மையை நினைத்துகொண்டே உறங்குவதில்லை..
ஆண்கள் -
அவர்களுக்கு பொம்மைகள் தேவை படுவதில்லை ...

Friday, August 27, 2010

கேட்கா குரல் ..!

யார் கூப்பிடுவதும் கேட்பதில்லை...
எல்லோரும் என்னுடன் பேச கத்திகொண்டிருக்கிறார்கள்..
அமைதியாக ...
Silent modeல். !

நிலா கடவுள் !

கடவுள் எல்லாம் மேலே இருப்பதாய் பாட்டி சொன்னதை கேட்டு ..
மூச்சிரைக்க மாடிக்கு சென்ற சிறுவன்..
நிலாவை பார்த்ததும் கடவுளை தேட மறந்துவிட்டான்.

நிஜம்தான் !

அத்தனைக்கும் ஆசை படு ...
என்று இரகசியமாய் சொல்லிவிட்டு சென்றார் புத்தர்
என் கனவில்... !

Wednesday, August 11, 2010

நேரம்...

கவிதை எழுத நேரம் தேவை ...
இல்லாத பொழுதில்
சும்மா தான் இருக்கின்றேன்
ஏதோ செய்துகொண்டு ... !

நிசப்தம் ..

நிசப்தம் மிகவும் கொடூரமானது...
அதன் பேரொலியில் எழுந்து விடுகின்றன
எப்போதோ தூங்கிய
நினைவுகள் ... !

தேவை..

நிலை கொள்ளாமல் நினைவுகள்
நெருப்பைப்போல் மேல்நோக்கியே
செல்கின்றன...
அனைக்க கேட்கிறேன்
எதையாவது
அல்லது
யாரையாவது... !

Monday, May 24, 2010

எழுதா வார்த்தைகள்...

எழுத நினைத்து மறந்து போன கவிதை ஒன்று நினைவில் வந்தது...
எழுத மீண்டும் மறந்து விட்டேன் அதை நினைத்துக்கொண்டே...

சொட்டு சொட்டாய் ...

நிரம்பி வழியும் நினைவுகள்...
மூட மறந்த குழாய் போன்றிருக்கிறது கடந்த காலம்...

இவள்..

கடவுள் இருந்த இடத்தை இவள் நிறப்பினால்...
அவன் மொபைலின் screensaverல்...

வலி ...

பல வண்ணங்களில் ...
பல அளவுகளில் ...
தருகிறார்கள் மாத்திரையை ...
ஒரே மாதிரி தான் இருக்கிறது எல்லா வலிகளும்...

தொலைந்த ரசனை ..

ஒரு மழை இரவில் ....
மழையை ரசிக்க மறந்து தேடுகிறேன் தீ பெட்டியை...
மழையை ரசித்துகொன்டிருந்தது அது ...
ஜன்னல் ஓரம் வந்த சாரலில் நனைந்தபடியே..

ஆசை ...

கண் மூடிய புத்தர் சிலையை வாங்க "ஆசை" மட்டும் தான் இருந்தது.

மாற்றங்கள்..

முன்போல் விளையாட முடிவதில்லை...
முன்போல் தூங்க முடிவதில்லை..
முன்போல் உண்ண முடிவதில்லை...
முன்போல் சிரிக்க முடிவதில்லை...
முன்போல் சிந்திக்க முடிவதில்லை...
இன்று போல் நாளை இருக்க போவதுமில்லை...
இன்றுடனே இருந்து விடுகிறேன்...
முன்போல் என அடுத்த வரி என் கவிதையில் இடம் பெரும் முன்.

நியதி...

தூக்கம் இல்லா இரவு ஒன்றில்....
தனிமை துணையில் நினைவு ஒன்று...
வாழ்க்கை எங்கு என்னை கூட்டிச்செல்கிறது ...?

பால் முதல் பால் வரை...
நான் முதல் நான் வரை ...
முடிவிற்காகவா தொடங்கினேன் ...?
கேள்விகள் தொடர்கிறது....

விடை தெரியாமல் தூங்கினேன் ...
எப்படி தூங்கினேன் ?
கேள்விகள் தொடர்கிறது...

அவள்...

ஏதோ கவிதை எழுதுகிறார்கள் ஒரு பெண்ணிற்காக ....
கவிதை நான் எழுதுகிறேன் ஏதோ ஒரு பெண்ணிற்காக..