Welcome

Saturday, November 13, 2010

ஒரு நொடி கடந்த காலம் ...

புகைப்படம் ஒன்று பார்க்க நேரிட்டது ..
அதனால் ஏனோ பல நியாபகங்கள் கிளறபடுகின்றன...
அந்த புகைபடத்தில் இருந்த முகங்கள் பெயர்களற்று
தம்மை காட்டிகொள்கின்றன..
சில முகங்களில் சிரிப்பும்..
சில முகங்களில் சந்தேகமும்..
சில முகங்களில் சோகமும் ..
கலந்து இருக்கின்றன ...
ஒரு புகைப்படம் எல்லா உணர்சிகளையும்
காண்பிக்க கூடியதாகவும் ..
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு உணர்ச்சியை தருவதாகவும் அமைகிறது..
என்னவாயினும் அவை காலத்தை
ஒரு நொடி அடக்கி வைத்துவிடுகின்றன ....

1 comment:

பிரதீபா said...

புரியுது புரியுது, நீங்க ஒரு பெரிய்ய போடோக்ராபர் ன்னு. :)