Welcome

Sunday, August 19, 2012

இலையுதிர்காலம்

hari (15 of 17)

பழுத்த இலையின் பிரிதலில்
தொடங்கிய இலையுதிர் காலம்
பிரதலின் வலியை உவமையாய் சொன்னது
என் மீது இலை விழுந்த
அந்த அந்தி மாலை வேலையில் !

பொருட்டு..

இதன் பொருட்டு நாளை நடப்பவையும்
அதன் பொருட்டு இன்று சிந்திப்பதும்
என்றும் நிகழ்கிறது நிலையில்லா இவ்வுலகில். .

இதற்கும் அதற்க்கும் நடுவில்...

ஒரு மறக்க முடியாத கனவிற்கும்
மறக்க நினைக்கும் நிஜத்திற்கும் நடுவில்
கனவாய் நகர்கிறது நிஜத்தில்  - வாழ்கை  !

Friday, March 16, 2012

அடுத்த வருடமும் வெயில் வரும்..

எல்லாரும் சொல்றாங்க..
ஒரு குடை வாங்கனும்..
ஒரு கூலிங் கிளாஸ் வாங்கனும்..
சன் ஸ்க்ரீன் லோஷன் வாங்கனும்...
காட்டன் டிரஸ் மட்டும் போடனும்..
வெயில் காலத்த எப்டி தான் சமாளிக்க போறேனோன்னு..

நான் சொல்றேன் ..
ஒரே ஒரு மரக்கன்னு வாங்கனும் ..
அத எங்காச்சும் நட்டு வெக்கனும்..
அப்பபோ கொஞ்சம் தன்னி ஊத்தனும்..
வெயில் காலத்த இப்டி கூட சமாளிக்கலாம்ங்கனு...

Saturday, January 14, 2012

கடல் ...பொய்... கல் ...

நான் சொல்லும் ஒவ்வொரு பொய்க்கும்
ஒவ்வொரு கூழாங்கல்லை கடலில் எரிகிறேன்
என்றாவது ஒருநாள் நான் மௌனித்திருக்கும் நேரம்
என் மீது கற்கள் எரிந்துகொன்டிருக்கபடும்
அப்பொழுது கடலின் நுரையில் என்  இரத்தம் கலந்திருக்கும். .

நிழலில் நிஜம்

என் நிழல் கக்கும் சில உன்மைகளை
என் நிஜம் ஏற்க மறுக்கின்றது
மன்றாடி பார்க்கும் நிழலின் நிஜத்தை
நிஜம் நிராகரிக்கும் தருனத்தில்
இருள் சூழ நிஜம் நிழலாய் மாறுகின்றது. .

நாய்க்குட்டி நினைவுகள்

அழைத்ததும் வந்துவிடும் நாய்க்குட்டியாய்
முகம் நக்கி வால் ஆட்டுகின்ற
நினைவின் ஸ்பரிசத்தால் மயிர்கூச்செறியும் கணத்தில்
கண்ணோரத்தில் மின்னும் நீர்த்துளி. . .