Welcome

Sunday, August 14, 2011

அனைவரும் நலம் ...

நலம் நலம் அறிய அவா. .
இங்கு நாங்கள் அனைவரும் நலம் ...
உடனே பதில் எழுதவும் . .
தீபாவளிக்கு வருவேன். .
உனது கடிதம் தாமதமாக தான் வந்தது...
போன்ற வார்த்தைகளை
சுமந்து வரும் கடிதங்களை ஏனோ
கான முடிவதில்லை. .
SMSல் தொடங்கி Skype Call ல் முடிந்து விடுகிறது வாழ்கை..

Saturday, June 25, 2011

இது சிறிது சிறமத்துடன் பதிவு செய்ய பட்டது. . .

அடடே ஆன்ட்ராய்டு ஃபோன் நல்லா தான்லே இருக்கு டய்ப் பன்றதுக்கு தான் டவுசர் கயிலுது. . .

Sunday, February 13, 2011

நினைவில் ஒரு புன்னகை

சுரேந்தர் -அவ்வளவு நெருக்கம் இல்லை. பார்த்து சுமார் 10 அல்லது 12 வருடங்கள் இருக்கலாம். பள்ளியின் இறுதிநாளில் விடை பெற்று கொன்டதாய் நினைவு. ஆறாம் வகுப்பு சேர்ந்த தொடக்கத்தில் சுரேந்தருடன் பள்ளி மைதானத்தில் சுற்றி இருக்கிறேன் . என்னுடன் காலையில் சீக்கிரம் வகுப்புக்கு வருபவர்களில் இவனும் ஒருவன் .

"2 நாளா சித்தப்பா சவாரி போல, வீட்ல அரிசி இல்லையா அதனால ஓட்டல்ல சாப்டேன் " என்று என்னிடம் ஏன் அன்று கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் நேரம் சொன்னான் என தெரியாது. " உங்க அப்பா எங்க வேலை செய்றாரு? " நான் அவனிடம் கேட்க
" அப்பா ...... தவறிட்டாரு " என்றான் . 'தவறிட்டாரு' என்று சொல்ல யாரோ கற்றுதந்துள்ளது தெளிவாய் தெரிந்தது.. அப்பா செத்துபோய்டாறு என்று சொல்லி இருந்தால் அவன் கண்கள் இன்னும் அதிகமாக கலங்கி இருக்கும் என்று எனக்கு தெரியும் .
"அம்மா வேலைக்கு போறதில்ல அதனால சித்தப்பா தான் ஆட்டோ ஓட்டறாரு .... அவருக்கு ஆட்டோ start பன்றப்போ அந்த starter lever அடிப்பாங்களே அதுமாத்ரி அடிக்ரப்போ நெஞ்சு வலி வந்த்ருச்சு அதான் வீட்ல rest எடுத்துற்றுகாறு " என்று அவன் சொன்னது இன்னமும் ஞாபகத்தில் இருக்கின்றது.

சுரேந்தர் எப்பொழுதும் தாமதமாய் வந்ததில்லை. வீட்டு பாடங்களும் தினமும் முடிப்பவன் . முடிக்கவில்லை என்றால் முதலில் டீச்சரிடம் ஒப்புகொல்பவன் . அவனது நேர்த்தியும் ,பொறுமையும் என்றும் என்னால் மறக்க முடியாது. இத்தனைக்கும் அவன் ஆறாம் வகுப்பு தான் என்னுடன் படித்தான் .12 ஆம் வகுப்பு வரை வேறு வகுப்பில் படித்திருந்தாலும் அவனை பற்றி நான் விசாரித்ததும் இல்லை யாரும் எதுவும் சொன்னதும் இல்லை. பார்த்தால் கை அசைத்து ஒரு புன்னகை . அவன் முகமும் அந்த புன்னகையும் மறைந்தாலும் அந்த புன்னகையில் ஏதோ உண்மையும் , உயிர்ப்பும் , நட்பும் இருப்பதை உணர முடியும் . இவை அனைத்தும் என் சகாக்களை பார்க்கும்வரையோ அல்லது வீட்டு பாடம் முடிக்காதது நினைவில் வரும் வரையோ தான் நினைவில் இருக்கும் . மற்றபடி சுரேந்தருக்கும் எனக்கும் வெறும் புன்னகையும் கை அசைப்புமே நடப்பாய் தொடர்ந்தது.

இத்தனை வருடம் கழித்து ஏன் அவன் என் நினைவில் வந்தான் ? இதோ நான் இப்பொழுது சென்று கொண்டிருக்கும் ஆட்டோவும் அதன் ஓட்டுனரும் தான் காரணம் . கை அசைக்க ஆட்டோ நின்று "எங்க சார் ? " என்று கேட்ட அந்த முகத்தில் தான் சுரேந்தர் எனக்கு தெரிந்தான். அதிகம் விலை கேட்கவில்லை நியாமான விலை கேட்டதால் இவன் சுரேந்தரா? என்ற சந்தேகம் அதிகரித்தது .

எனக்கும் ஓட்டுனருக்கும் இடையே கைப்பிடி அளவு தூரம் தான் இருந்தும் வார்த்தை வரவில்லை உங்கள் பெயர் என்னவென்று கேட்பதற்கு. இறங்க வேண்டிய இடமும் வந்தாகிவிட்டது . இறங்கி காசையும் கொடுத்தாகிவிட்டது . ஒரு புன்னகை ? ஒரு கை அசைப்பு? இல்லை ! பெட்டி தூக்கி நடக்க ஆரம்பித்து விட்டேன் .

இதோ பெங்களூர் சென்று கொண்டிருக்கிறேன் . நாளை சுரேந்தர் ஞாபகத்தில் இருக்க மாட்டான் , எனது வேலை அப்படி . ரயில் கிளம்ப என் எதிரில் இருந்தவர் தனது நண்பனுக்கு கை அசைத்து புன்னகைத்தார் , அவரது கண்களின் ஓரத்தில் லேசாய் நீர் கசிந்தது . என்னை பார்த்தும் ஒரு சிறு புன்னகை. இதோ மற்றுமொரு புன்னகை . ஒரு புதிய நட்பின் தொடக்கம் . அவருடன் நான் இன்று பேசி அவரை பற்றி சிலவும் தெரிந்து கொண்டு என்னை பற்றி கொஞ்சம் சொல்லத்தான் போகிறேன் அந்த புன்னகையில் அத்தனையும் நிச்சயம் . அனால் மனம் ஏனோ கனத்தது . சுரேந்தர் நினைவில் நீங்காமல் நின்றான். நண்பர்கள் அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பினேன் , சுரேந்தரின் அலை பேசி என் இருக்கிறதா என்று . அடுத்த ஒரு மணி நேரத்தில் இல்லை ! என்று இருவரும் . யாரது? என்று பலரும் அனுப்பி இருந்தனர்.
அலுவலகமும் , வேலையும் ஞாபகம் வர சுரேந்தர் பற்றிய நினைவு நாளை இருப்பது கடினம் எனதெரிந்து அவனை பற்றி வேறென்ன நினைவுகள் உள்ளன கிளறி பாப்போம் என்று கண்மூடுகின்றேன் . அவனின் சிரித்த முகமும் கை அசைக்கும் பிம்பமும் தெளிவாய் தெரிந்தது .

Saturday, January 15, 2011

சிறகு

சிறகின்றி பறப்பது போல் ஒரு பறவையை என் கனவில் கண்டேன்..
அதற்கு சிறகு பொறுத்த அன்று நான் மறுபடியும் தூங்கினேன் ...
அனால் அன்றோ நான் சிறகின்றி பறப்பதுபோல தான் கனவு வந்தது...
மறுநாள் காலை வியர்த்துகொட்டி எழுந்து பார்த்தபொழுது...
என் படுக்கையில் கிடந்தது ஒரு உதிர்ந்த சிறகு ....