Welcome

Tuesday, September 7, 2010

வெளி..!

நாம் கதவின் சாவி துருவத்தின் வழியே
உலகத்தை பார்துகொண்டிருகின்றோம்..

நாம் முழுதாய் பார்க்க அவ்வளவு வசதியும் இல்லை...
அனால் அப்படி பார்க்கும் பொழுது மட்டுமே
ஒருவிதமான எதிர்பார்ப்பு இருக்கின்றது...

மறுபக்கத்தில் நமக்கு பிடித்ததும் பிடிக்காததும்
நமக்கு தெரிந்தாலும்
ஏதோ ஒன்றை எதிர்பார்த்தே
மறைந்தும் குனிந்தும் பார்த்துகொண்டிருக்கின்றோம் ..

யாரோ சாவியை நுழைத்து கதவை திறந்து விட...
முன்னும் பின்னும் யாரும் அற்ற வெளியில்
நாம் மிதந்து கொண்டிருப்போம்...

1 comment:

பிரதீபா said...

//யாரோ சாவியை நுழைத்து கதவை திறந்து விட...
முன்னும் பின்னும் யாரும் அற்ற வெளியில்
நாம் மிதந்து கொண்டிருப்போம்//

ரசிக்கத்தக்க முடிவு.
இன்னும் சரியாய் பட்டை தீட்டினால், சரியான கவிதையின் வடிவம் பெறும். தொடர்ந்து எழுதவும்.